Ajith vijay: எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் இவர்கள் வரிசையில் திரைத்துறையில் போட்டி நடிகர்களாக பார்க்க கூடியவர்கள்தான் விஜய் – அஜித். ஆரம்பத்தில் அஜித் – விஜய் என எழுதிய பத்திரிக்கைகள் ஒரு கால கட்டத்தில் விஜய் – அஜித் என்று மாற்றி எழுதினார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு விஜய்யின் வளர்ச்சி இருந்தது.
இருவருமே சமகாலத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர்கள். தொடக்கத்தில் காதல் படங்களில் நடித்து பின்னால் ஆக்சன் நாயகனாக மாறியவர்கள். ஒரு கட்டத்தில் 2 பேருமே மாஸ் நாயகனாக மாறினார்கள். விஜய்யும், அஜித்தும் வளரும் நேரத்தில் இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்கிற படத்தில் சேர்ந்தும் நடித்திருந்தனர்.
அந்த ஒருபடம் மட்டும் தான். அதன் பிறகு 2 பேரும் இணைந்து நடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சினிமாவில் இருவரும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒருவரை ஒருவர் திட்டியும் டயலாக் பேசிக்கொண்டனர். திருமலை படத்தில் எவன்டா உங்க தல என சீறி வசனம் பேசினார் விஜய். அட்டகாசம் படத்தில் அஜித் இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என பாட்டு வைத்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பக்குவம் அடைந்து விட அதை விட்டுவிட்டார்கள். ஆனால், அவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு கொள்வவது நிறுத்தவில்லை. டிவிட்டரில் ஹேஷ்டேக்குகள் வாயிலாக அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். இதை சீரியஸாக இருவருமே அஜித் – விஜய் கண்டிப்பதும் இல்லை.
ஆனால், மாஸ்டர் படத்தின் இசை ரிலீஸ் விழாவில் கோட் சூட் போட்டு கொண்டு வந்த விஜய் நண்பர் அஜித் மாதிரி என கூறி பலரையும் ஆச்சர்யப்படுத்தினார். மேலும், வாரிசு படம் ரிலீசான அதே தேதியில் துணிவு படமும் வெளியாகிறது என தெரிந்தபோது வரட்டும்பா. அவர் நம்ப நண்பர்தான் என கூறினார் விஜய்.
அஜித்தின் அப்பா இறந்தபோது அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி விட்டு வந்தார் விஜய். இந்நிலையில், விஜயுடன் பல திரைப்படங்களில் நடித்தவரும், அவரின் கூட்டாளியுமான நடிகர் தாமு ஊடகம் ஒன்றில் பேசும் போது விஜய் அஜித்தின் தீவிர ரசிகர். அது பலருக்கும் தெரியாது. அஜித்தை அவர் மிகவும் ரசிப்பார். அஜித்தின் பில்லா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றைத்தான் விஜய் தனது மொபைலில் பல நாட்களாக காலர் ட்யூனாக வைத்திருந்தார்’ என கூறியிருக்கிறார்.