Vidamuyachi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங்குகள் முடிந்திருக்கும் நிலையில் இணையத்தில் அப்போ அப்போ அடுத்த கட்ட முக்கிய அறிவிப்புகளும் கசிந்துவருகிறது.
அஜித்தின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் ஒரு அப்டேட்டுக்கும் பெரிய அளவில் காத்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பித்ததிலிருந்து நிறைய அதிர்ச்சிகளையே பார்க்க முடிந்தது. முதலில் இப்படத்தினை இயக்க இருந்தவர் விக்னேஷ் சிவன் தான். ஆனால் அவர் கூறிய கதை அஜித்துக்கு திருப்தி கொடுக்காத நிலையில் அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு பதில் டைரக்டர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க ஒப்பந்தம் பண்ணப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கு பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புகள் ஆரம்பிப்பதற்கு பல மாதங்கள் ஆனது.
இதை அடுத்து அஜித் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்ப கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தில் படப்பிடிப்பு ஆரம்பமானது. இருந்தும் அவர்கள் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் போனதற்கு காலநிலை காரணமானது. இதனால் அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்குள் சென்றார்.
ஒரு கட்டத்தில் 2 படத்தின் ஷூட்டிங்குகளையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அஜித் 16 மணி முதல் 20 மணி நேரம் 2 படங்களின் படப்பிடிப்பு மேலும் மாறி மாறி கலந்து கொண்டிருப்பதாக அவருடைய மேனேஜர் சுரேஷ்சந்திரா அண்மையில் தெறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது விடாமுயற்சி ஷூட்டிங் மொத்தமாக முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சின்ன சின்ன பேட்ச் ஒர்க் ஸீன்கள் மட்டும் இன்னும் சில நாட்களில் முடிக்கப்பட்டு விடும் எனவும் சொல்லப்படுகிறது. படத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய லைக்கா நிறுவனம் திட்டமிட்டுகொண்டிருக்கிறது.
ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மற்றும் சூர்யாவின் கங்குவா படம் என 2 முன்னணி நடிகர்களின் படங்கள் பந்தயத்தில் இருப்பதால் படத்தினை நவம்பரில் ரிலீஸ் செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தில் முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று தகவல் தெறிவிக்கிறது.