நடிகர் வடிவேலு உடன் பல நகைசுவைகளில் நடித்து இருப்பவர் சிங்கமுத்து. அவர்கள் தொடக்கத்தில் ஒன்றாக இருந்த நிலையில் அதன் பின் பிரச்சனை ஏற்பட்டதின் காரணமாக பிரிந்துவிட்டனர். அவர்கள் இடையே பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் சிங்கமுத்து கொடுக்கும் பேட்டிகளில் வடிவேலு குறித்த பல விஷயங்களை போட்டுடைத்து வருகிறார்.
வடிவேலு மாதிரியே ஒரு படத்தில் நடித்த நடிகரை அடியாட்கள் வைத்து அடித்தது போன்ற பல விஷயங்களை சிங்கமுத்து பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.
வழக்கு
இந்நிலையில் சிங்கமுத்து தன்னை குறித்து பொய்யான விஷயங்களை சொல்லி அவதூறு பரப்புகிறார் என வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருக்கிறார். பெயரை களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு இருக்கிறார் வடிவேலு. இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில் சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு போட்ட நீதிபதி வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைத்து இருக்கிறார்.