Gemini Ganesan: சினிமாவில் முன்னணி நடிகராக நடிக்கும் பிரபலங்கள் பெரும்பாலனவர்களுக்கு ஏதாவது ஒரு பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம் தான். அந்த வகையில் காதல் மன்னன், சாக்லேட் பாய், வசீகர பேச்சால் மயக்க அடிக்கும் நடிகர் என பல பேரை நாம் சொன்னாலும் இவர்கள் அனைவருக்கும் மூத்தவராக இருந்து தமிழ் சினிமாவினை ஆட்டிப் படைத்தவர் ஜெமினி கணேசன்.
பொதுவாக இவர் நடித்த படங்கள் Love படமாக தான் இருக்கும். சினிமாவில் மட்டுமல்லாமல் உண்மையான வாழ்க்கையிலும் காதல் மன்னன் ஆகவே வாழ்ந்து இருக்கிறார். அதனால் தான் 4 மனைவிகளுடன் காதல் வசப்பட்டு பல லீலைகளை புரிந்திருக்கிறார்.
நிஜத்திலும் காதல் மன்னனாக வாழ்ந்த ஜெமினி
இவருடைய முதல் மனைவி பெயர் அலமேலு, இவர்களுக்கு மொத்தம் 4 மகள்கள். அதில் ரேவதி, கமலா செல்வராஜ், ஜெயலட்சுமி ஆகிய 3 பேரும் மருத்துவர்கள். 4வது மகள் நாராயணி பத்திரிகையாளராக பணி செய்தார்.
இவர்களை தொடர்ந்து 2 வது திருமணம் செய்து கொண்டது புஷ்பவல்லி. இவர்களுக்கு ரேகா மற்றும் ராதா என 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் ரேகா பாலிவுட்டில் டாப் கதாநாயகியாக உலா வந்தார். அடுத்ததாக 3வது மனைவியாக நடிகை சாவித்ரியை திருமணம் பண்ணிக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் விஜயா சாமுண்டீஸ்வரி என்கிற மகளும் மற்றும் சதீஷ்குமார் என்கிற மகனும் இருக்கிறார்கள்.
இப்படி3 மனைவிகள் இருக்கும் பொழுதே ஜெமினி கணேசன் 78வது வயதில் 4வது கல்யாணத்தை பண்ணிக்கொண்டார். மனைவி பெயர் ஜூலியானா ஆண்ட்ரூ, இவருக்கு குழந்தை கிடையாது.
இப்படி இந்த 4 மனைவிகளுடன் காதல் மன்னனாக வாழ்ந்து வந்த ஜெமினி கணேசனுக்கு ஏன் சாம்பார் என பட்டப்பெயர் வந்தது என்பதை பற்றி பல ஆண்டுகளுக்கு பின் ஜெமினி கணேசனின் மகளாக இருக்கும் கமலா செல்வராஜ் அண்மையில் யூடியூப் சேனலில் தெறிவித்திருக்கிறார்.
அதாவது அவர் சொன்னது என்னவென்றால், எனது தந்தை ரொம்பவும் அழகாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொண்டு இளமையாக இருக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர். அதற்காகவே தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு பிட்டாக இருப்பார். அதனால் அசைவ உணவு சாப்பிட மாட்டார்.
எப்பொழுதும் சைவ உணவுகளை சாப்பிட்டு அதன் மேல் அதிக பிரியம் வைத்துஅந்த உணவை விரும்பி சாப்பிடுவார். அதிலும் தினமும் அவருடைய உணவில் சாம்பாரு இருக்க வேண்டும். அதனால் பார்ப்பவர்கள் எல்லோரும் சாம்பார் என்று அழைக்க தொடங்கினார்கள். அதுவே நாளடைவில் ஜெமினி கணேசன் சாம்பாரு என்று மாறிவிட்டது என்று கமலா செல்வராஜ் கூறியிருக்கிறார்.