நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில்உருவாகி பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தங்கலான் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. பார்வதி, மாளவிகா, பசுபதி, ஹரி, அர்ஜுன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரலாறு மரபுவழிக் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதிலும் இதுவரை ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இதுவரையில் ரூ. 30. கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் நடித்த எல்லோருமே தங்களது சிறந்த நடிப்பை வெளிகாட்டி இருந்தனர். படத்தில் வரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை பார்வதி ரூ. 70 லட்சம் வரை சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.