2000 ஆண்டு கால கட்டங்களில் சாக்லேட் பாயாக திகழ்ந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் பல ரசிகைகளின் கனவு கண்ணனாகவே உலா வந்தார். அந்த காலகட்டங்களில் இவர் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவர் நடிப்பில் ரிலீசான பாடல்களும் இன்றளவில் மட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து திருமணவாழ்க்கையில் இணைந்த பிரசாந்துக்கு அவருடைய வாழ்க்கை துணை நன்றாக அமையவில்லை. ஒருசில ஆண்டுகளிலேயே அவருடைய திருமண லைஃப் முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் காரணத்தினால் நடிப்பதில் இருந்தும் விலகி இருந்தார்.
தற்போது அந்தகன் படத்தின் மூலம் மறுபடியும் மாஸாக come back கொடுத்துள்ளார். அதன் பின்பு இளைய தளபதி விஜய் உடன் நடிக்கும் கோட் படமும் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக தயாராக உள்ளது. பிரசாந்தை திரும்பவும் திரையில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
அந்தகன் திரைப்படத்தின் விழா மேடையில் பிரசாந்தின் தகப்பனார் தியாகராஜன் பிரசாத்தின் வாழ்க்கை குறித்து ரொம்பவும் கவலையாக பேசி இருந்தார். இனி அவருக்கு மேரேஜ் செய்துவிட்டு தான் மற்ற வேலை எனக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் தியாகராஜன் மற்றும் அவருடைய மனைவிக்கு நெருக்கமாக இருக்கும் இடத்தில் பெண் பார்த்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவருக்கு விரைவில் பெண் பார்க்கப்பட்டு கல்யாண தேதி குறித்த அறிவிப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை பிரசாந்தின் முதல் மனைவி கிரஹலட்சுமியுடன் life மொத்தமாக 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்ததாம். அவர்களுடைய திருமண வாழ்க்கையில் உண்டான திடீர் பிரச்சனையால் பிரசாந்த் மீது வரதட்சணை கேஸ் அவரது மனைவி பதிவு செய்துள்ளார். அத்தோடு விவாகரத்து கேஸும் பதிவிட்டிருந்தார். இருந்தாலும் பிரசாந்த் அவருடைய மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றே தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் கிரஹலட்சுமி விவாகரத்து வேண்டும் என்று பிரிந்து விட்டாராம்.