Vijayakanth: அது ஒரு பொற்காலம் என்று சொல்லும் விதத்தில் தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் படைப்புகள் மறக்க முடியாத அளவிற்கு நல்ல படங்களாக வெற்றி அடைந்து இருக்கிறது. அந்த வகையில் இப்பொழுதும் இவருடைய படங்களை பார்த்து ரசிக்கும் அளவில் இருக்கிறது. இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது. அதிலும் ரஜினி, கமலுக்கு போட்டியாக தொடர்ந்து நிறைய படங்களை தந்திருக்கிறார்.
இன்னும் சொல்ல போனால் இவர்களை காட்டிலும் கேப்டன் விஜயகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஏறத்தாழ 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 80, 90களில் கதாநாயகனாக நடித்த பொழுது ஒரு ஆண்டிற்கு 15 படங்களுக்கும் மேல் நடித்து ஆச்சரியப்பட செய்திருக்கிறார்.
ஒரு வருஷத்துல 15 திரைப்படங்களுக்கு மேல் நடித்த கேப்டன்
அதாவது 1984 ஆம் வருடம் இவர் நடிப்பில் 10 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதே போல 1985 ஆம் வருடம் 15 படங்களில் நடித்து இளம் நடிகர்களுக்கும், புது இயக்குனர்களுக்கும், வாய்ப்பு அளிக்கும் விதமாக அவர்களை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அந்த வகையில் கேப்டன் உதவி பண்ணிய வகையில் தற்போது விஜய் மற்றும் சூர்யா முன்னணி கதாநாயகன் இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
மேலும் விஜயகாந்த் நடிப்பில் வந்த பல படங்களில் மறுபடியும் மறுபடியும் பார்க்கும் வகையில் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதில் சில படங்கள் 175 நாட்களுக்கும் அதிகமாக ஓடி சாதனை படைத்த படமாக அமைந்திருக்கிறது. எத்தனையோ கிராமங்களில் இவருடைய படங்கள் தான் பொழுதுபோக்கு என்று சொல்வதற்கு தகுந்தது போல பல கிராமங்களில் உள்ள திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது காணலாம்.
வைதேகி காத்திருந்தாள்: R சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் வருடம் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி மற்றும் செந்தில் நடிப்பில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் ரிலீசானது. இப்படத்தின் கதையானது நிஜமான காதலுக்கு அழகு தேவையில்லை என்று சொல்வதை அவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கும். அத்துடன் உண்மையான காதலுக்கு உயிரையும் தர தயார் என்று இப்படத்தில் வெள்ளைச்சாமியாக விஜயகாந்த் எல்லோருடைய மனதிலும் வாழ்ந்து காட்டியிருப்பார். இதில் வரும் அந்த வசனம் போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் உணர்வு பூர்வமான வார்த்தையாக அமைந்து இருக்கும்.
சேதுபதி ஐபிஎஸ்: P வாசு இயக்கத்தில், 1994 ஆம் வருடம் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் விஜயகாந்த், மீனா, நம்பியார் மற்றும் ஸ்ரீவித்ரா நடிப்பில் வெளிவந்தது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் ஒரு காவல் அதிகாரியின் கதையை சொல்லும் அளவிற்கு விஜயகாந்த் மிரட்டலான நடிப்பை நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விஜயகாந்தின் வெற்றி படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அம்மன் கோவில் கிழக்காலே: R சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் வருடம் விஜயகாந்த், ராதா நடிப்பில் அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படம் வெளியானது. இப்படத்திற்காக விஜயகாந்த்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இந்த திரைப்படம் கேப்டனின் முதல் வெள்ளி விழா திரைப்படமாகவும் வெற்றி பெற்றது. கிளைமேக்ஸ் காட்சியை பார்க்கும் பொழுது எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் வர வைக்கும் அளவில் விஜயகாந்தின் நடிப்பு பாராட்டை பெற்றுவிட்டது.
செந்தூரப்பூவே: பி.ஆர்.தேவராஜ் இயக்கத்தில் 1988 ஆம் வருடம் விஜயகாந்த், ராம்கி மற்றும் நிரோஷா நடிப்பில் செந்தூரப்பூவே திரைப்படம் ரிலீசானது. இந்த படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு பிரம்மாண்ட பட வரிசையில் முக்கிய படைப்பாக இருந்தது. இப்படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட்டாகி படமும் வெற்றி பெற்று விட்டது.
கேப்டன் பிரபாகரன்: RK செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வருடம் விஜயகாந்த், சரத்குமார் மற்றும் ரூபினி நடிப்பில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளியானது. இப்படம் இவருடைய 100 வது திரைப்படமாக சாதனை படைத்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரையிலும் வேறு எந்த ஒரு தமிழ் நடிகருக்கும் இந்த பெருமை கிடைத்ததே கிடையாது. அத்துடன் இந்த படத்தில் சண்டை காட்சிகளில் எந்தவித டூப்பும் இல்லாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடித்தார் என்று பல மேடைகளில் இயக்குனர் செல்வமணி பேசியிருக்கிறார்.
சட்டம் ஒரு இருட்டறை: S.A சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் வருடம் விஜயகாந்த், பூர்ணிமா நடிப்பில் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் ரிலீசானது. கேப்டனுக்கு மிகவும் திருப்புமுனையாக இருந்தது இப்படம். வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் சினிமாவில் தூக்கி நிறுத்திய படம் இதுதான் விஜயகாந்துக்கு என்றே கூறலாம். அந்த விதத்தில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ரீமேக் பண்ணப்பட்டு வெற்றி கிடைத்தது.