Wednesday, May 14, 2025

கமிட் ஆன பிறகு அஜித் ரோலில் இருந்து விலகிய நடிகர் பிரசாந்த் – இதான் காரணம்

பிரபல தயாரிப்பாளர் கலைபுலி S. தாணு, நடிகர் பிரசாந்த் குறித்து சொல்லியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பல ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2000ம் வருடம் கலைப்புலி S. தாணு தயாரிப்பில், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ரிலீசான படம் தான் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படத்தில் நடிகர் மம்முட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய் மற்றும் தபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பின் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்து வெற்றி கண்டார்கள். இப்படத்திற்கு தேசிய விருது மற்றும் பிலிம்பேர் அவார்ட் சவுத் போன்ற விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் பற்றி அண்மையில் தயாரிப்பாளர் தாணு பேட்டியில் பேசியுள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு பேட்டி:

அதில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதலில் பிரபு தேவா மற்றும் பிரசாந்த் இருவரும் நடிப்பதாக இருந்தது. பின் பிரபுதேவாவிற்கு நாங்கள் ஒரு சம்பளம் சொன்னோம், அவர் இவ்வளவு குறைவான சம்பளத்தில் நடிக்க மாட்டேன் என்று வருத்தப்பட்டு படத்திலிருந்து விலகி கொண்டார். மேலும் இப்படத்தில் கதாநாயகிகளாக முதலில் சௌந்தர்யா மற்றும் மீனாவை தான் முடிவு செய்திருந்தோம். நடிகர் பிரசாந்தும் கதையை கேட்ட பிறகு நான் (அஜித் ரோல்) நடிக்கிறேன் என்று தெரிவித்து விட்டார்.

ஐஸ்வர்யா ராய என்ட்ரி:

அதற்குப் பிறகுதான் ராஜீவ் மேனன் பம்பாய் சென்ற போது ஐஸ்வர்யா ராய் இடம் இந்த கதையை பற்றி சொல்லி இருக்கிறார். கதையைக் கேட்டதும் அவங்க ஓகே நான் செய்றேன்னு சொல்லிட்டாங்க. உடனே எனக்கு போன் செய்து ஐஸ்வர்யா ராய் நடிக்க சம்மதிச்சிட்டாங்க அப்படின்னு சொன்ன உடனே, நானும் சூப்பர் என்று சொல்லிவிட்டு முன்பணத்தையும் அனுப்பி விட்டேன். அதற்குப் பிறகு பிரசாந்த், நான் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் உடன் ஜீன்ஸ் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறேன்.

ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க கேட்ட பிரசாந்த்:

அதனால், இந்தப் படத்தில் தபுவிற்கு இணையாக நடிப்பதற்கு பதிலாக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்தால் நல்லா இருக்கும் என்பது போல ஒரு சஜஷன் கொடுத்தாரு. அதற்கு இல்லை கதையின்படி இதுதான் உங்கள் கதாபாத்திரம் என்று பிரசாந்திடம் சொல்லிவிட்டோம். பிறகு பிரசாந்த் அந்த படத்தில் இருந்து விலகி கொண்டார். அதற்குப் பிறகுதான் மம்முட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய் மற்றும் தபு உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்தார்கள் என்று தெரிவித்துள்ளார் தாணு.

பிரசாந்த் குறித்து:

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் நடிகர் பிரசாந்த் ஆண் அழகன் என்ற பட்டத்தை பெற்றவர். இவர் பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான தியாகராஜனின் மகன் ஆவார். 1990 ஆம் வருடம் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நிறைய ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த், சில பல காரணங்களால் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். தற்போது மறுபடியும் நடித்து வரும் நிலையில் அந்தகன் மற்றும் கோட் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Also

Hot this week

ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதா? மலர் மற்றும் விக்ரம் வேதா சீரியல் புகழ் நடிகை அஷ்வதிக்கு…

தற்போது தமிழ் சின்னத்திரை நடிகர்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம் உள்ளது.....

2 மகள்களுமே டாக்டர்- படங்களில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் சூப்பர் மாம் தான் சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன் மகள்கள் கொடுத்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது...

5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிங்கமுத்து மீது வழக்கு போட்ட வடிவேலு! என்ன பிரச்சனை?

நடிகர் வடிவேலு உடன் பல நகைசுவைகளில் நடித்து இருப்பவர் சிங்கமுத்து. அவர்கள்...

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்காக இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை அடைந்திருக்கும் திரைப்படம் தான்...

நாடோடிகள் பட நடிகை அனன்யாவை ஞாபகமிருக்கா.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க

ஜெய், அஞ்சலி உள்பட பலர் நடித்திருந்த படம் எங்கேயும் எப்போதும். ஒரு...

Topics

நடிகை மேகா ஆகாஷுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா? அழகிய போட்டோஸ் இதோ

மெகா ஆகாஷ் : தெலுங்கு திரையுலகம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர்...

ஒருவழியா விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்!.. எப்போது வெளியாகும் தெரியுமா?.. பரபர அப்டேட்!…

Vidamuyachi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங்குகள் முடிந்திருக்கும் நிலையில் இணையத்தில்...

Related Articles