கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா திரைப்படம் கடந்த 15ஆம் திகதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை வாங்கி கொண்டிருக்கின்ற நிலையில், நடிகர் அஜித் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசி இருக்கும் விஷயமொன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் கண்டு ரசித்தது சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த ரஜினி முருகன் படம். அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் அனைத்தும் பெரிய இடமாகத்தான் இருந்தது. விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க தொடங்கி தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தனக்கென சினிமா துறையில் தனி மரியாதையை உருவாக்கிக்கொண்டார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றார். அதைத்தொடர்ந்து, மாமன்னன், சாமி- 2, பைரவா மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இறுதியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் ரகு தாத்தா படம் ரிலீசானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுகொண்டிருக்கும் நிலையில், நடிகர் அஜித் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டி ஒன்றில் சில விடயங்களை குறிப்பிட்டு உள்ளார். அதில், “தனக்கு நடிகர் அஜித்துடன் இணையாக சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இரு்க்கிறது என்பதை வெளிப்படையாக சொன்ன அவர், ஆனால் அஜித்துக்கு தங்கையாக நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி அஜித்தை சந்தித்த அனுபவம் பற்றி பேசிய கீர்த்தி, நான் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது தங்கியிருந்த ஹோட்டலில் தான் நடிகர் அஜித் தங்கி இருந்தார் , அங்கு நான் அவரை பார்த்து பேசினேன் எனவும் வெளிப்படையாக குறிப்பிட்டார். அஜித்துக்கு தங்கையாக நடிக்க மாட்டேன் என கீர்த்தி சொன்னது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.