சரண்யா பொன்வண்ணன் மகள்கள் கொடுத்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் உலகநாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் இருக்கும் அனைத்து கதாநாயகர்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர்களின் முதல் விருப்பம் இவராக தான் இருக்கும். மேலும், பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அதீத திறமையை நிரூபித்து காட்டி இருக்கிறார் சரண்யா. இவரது நடிப்பிற்காக பல விருதுகளையும் பெற்று குவித்து இருக்கிறார். தற்போதும் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். விருகம்பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் பள்ளியை வைத்து நடத்தி வருகிறார் சரண்யா. திரைப்படங்களில் நடித்துக்கொண்டே இந்த பேஷன் டிசைனிங் பள்ளியில் பாடம் கற்று கொடுத்து வருகிறார்.
சரண்யா பொன்வண்ணன் குடும்பம்:
இதனிடையே இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் சாந்தினி, பிரியதர்ஷினி இருக்கின்றனர். இதில் மூத்த மகள் குழந்தைகள் நல டாக்டராகவும், இளைய மகள் பொதுநல டாக்டராகவும் இருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி குடும்பத்தையுமே கண்டிப்புடன் சரண்யா பொன்வண்ணன் கவனித்துக் கொள்கிறார். இந்த நிலையில் அண்மையில் கொடுத்த பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் மகள்கள், வீட்டில் அம்மா ரொம்ப கண்டிப்பானவர் ஆனால், அப்பா அப்படி இல்லை.
சரண்யா மகள்கள் பேட்டி:
நாங்கள் டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்பது நாங்கள் எடுத்த முடிவு. அம்மா,அப்பா இருவருமே சொன்னது இல்லை. நாங்கள் ஆசைப்பட்டதைதான் அவர்கள் நிறைவேற்றி வைத்தார்கள். ஆனால், படிப்பு என்று வரும்போது மதிப்பெண் அதிகம் பெறவில்லை இல்லை என்றால் கண்டிப்பாக திட்டு கிடைக்கும். வீடு எப்போதுமே நீட்டா இருக்க வேண்டும் என்று அம்மா சொல்லுவாங்க. அதனால் சாப்பிட்டு விட்டு சாப்பிட்ட தட்டை கழுவவில்லை என்றாலும் திட்டுவார்.
சரண்யா பற்றி சொன்னது:
அம்மா படப்பிடிப்புக்கு போனாலும் அங்கிருந்து நாங்கள் என்ன பண்ணணும், பண்ண கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதேபோல் தான் எங்கள் அப்பா நாங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக காலை 4, 2 மணி என்று அதிகாலையில் எங்களை எழுப்பி விடுவார். அம்மா தான் எங்களுக்கு மெட்டீரியல் வாங்கி வந்து அவரே தைத்துக் தருவார். இதற்கு முன்பு எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான ஆடை தான் தருவார் என்று சொல்லி இருந்தார்கள்.
சரண்யா கூறியது:
இவர்களைத் தொடர்ந்து நடிகர் பொன்வண்ணன், நான் ஸ்ரிக்ட் இல்லை. என்னுடைய மனைவி தான் ஸ்ரிக்ட். நாங்கள் 2 பேருமே திரைத்தொழிலில் இருந்தாலும் அவர்கள் எங்களை போல வராமல் அவர்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து கொண்டார்கள். அதேபோல அவர்கள் படிக்க நான் அதிகாலையில் எழுந்திரிக்க சொல்லுவேன். அந்த பொறுப்பை என்னிடம் தந்ததால் நான் பண்ணினேன் என்று சொல்ல, உடனே சரண்யா, அவர்கள் என்ன சாப்பாடுஎடுத்து செல்கிறார்கள் என்பதை கூட நான் கரெக்டா கவனிப்பேன். ஒழுக்கம் வேண்டும் என்பதற்காகவே நான் கண்டிப்பாக இருப்பேன் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.